Tuesday, March 15, 2011

தொகுதி அறிமுகம் - 11


6. ஆவடி
Last Updated :

*  தொகுதி பெயர் : ஆவடி
   *  வரிசை எண் : 6
   
 *  அறிமுகம் :

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்டுள்ள முதல் 10 தொகுதிகளில் ஆவடி 3-வது இடத்தில் உள்ளது.
   
*  எல்லை :

1977-ம் ஆண்டு முதல் பூந்தமல்லி தொகுதியில் இருந்து வந்த ஆவடி நகராட்சி, திருநின்றவூர், திருவேற்காடு பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டதாக மறு சீரமைப்புக்கு பிறகு ஆவடி தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
 பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடுகுத்தகை, நெமிலிச்சேரி, கருணாகரசேரி ஊராட்சிகள் ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
   *  தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
   ஆவடி நகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம், தண்டரை, சேக்காடு, கன்னிகாபுரம், திருமலைராஜபுரம், பக்வத்சலபுரம், நம்பெருமாள்பேட்டை, அண்ணனூர், சாந்திபுரம், திருமுல்லைவாயல், கோவில் பதாகை, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய 48 வார்டுகள். திருநின்றவூர், திருவேற்காடு பேரூராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து வார்டுகள். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கருணாகரசேரி, நெமிலிச்சேரி, நடுகுத்தகை ஊராட்சிகள் மற்றும் அவற்றுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களும் ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

*  வாக்காளர்கள்

 ஆண் :                             1,35,635
பெண்:                              1,30,257  
திருநங்கைகள்:                    22
மொத்தம்:                      2,65,915
  
*  வாக்குச்சாவடிகள்

 மொத்தம் : 295
  
 *  தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

 எம். செல்வராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),

தொ.பே. எண்: 044- 27661200, 94450 08153.

No comments:

Post a Comment