31. தாம்பரம் (பொது)
* தொகுதி பெயர் : தாம்பரம்
* வரிசை எண் : 31
* அறிமுகம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் மிகப்பெரிய தொகுதியாக 8 லட்சம் வாக்காளர்களைக் கொண்டு திகழ்ந்தது தாம்பரம் தொகுதி. மறு சீரமைப்புக்குப் பின் இந்தத் தொகுதியிலிருந்து புதிதாக பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இரு தொகுதிகள் உருவாக்கப்பட்டதால் அதன் பழம்பெருமையை இழந்துள்ளது. 1977-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் இதுவரை 8 முறை தேர்தல் நடந்துள்ளன. இதில் 5 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.
* எல்லை :
தெற்கில் பெருங்களத்தூர் பேரூராட்சியும், கிழக்கில் செம்பாக்கம் பேரூராட்சியும், வடக்கில் சிட்லப்பாக்கமும், மேற்கில் முடிச்சூரும், தாம்பரம் தொகுதியின் எல்லைகளாகும். தாம்பரம் தொகுதியில் தாம்பரம் நகராட்சி, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர் ஆகிய 5 பேரூராட்சிகளும், முடிச்சூர், அகரம்தென், கஸ்பாபுரம், வெங்கம்பாக்கம், மதுரப்பாக்கம், திருவஞ்சேரி ஆகிய 6 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
* இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.
1977 முனு ஆதி (அதிமுக)
1980 பம்மல் நல்லதம்பி (திமுக)
1984 இல.ராஜமாணிக்கம் (அதிமுக)
1989 எம்.ஏ.வைத்தியலிங்கம் (திமுக)
1991 எஸ்.எம்.கிருஷ்ணன் (காங்கிரஸ்)
1996 எம்.ஏ.வைத்தியலிங்கம் (திமுக)
2001 எம்.ஏ.வைத்தியலிங்கம் (திமுக)
2006 எஸ்.ஆர்.ராஜா (திமுக)
* வாக்காளர்கள்
ஆண்: 1,20,689
பெண்: 1,17,606
மொத்தம்: 2,38,295
* வாக்குச்சாவடிகள்
மொத்தம் : 253
* தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
கோட்டாட்சியர் கே.செüரிராஜன் 90940 14667.