Monday, March 14, 2011

தொகுதி அறிமுகம் - 9


மயிலாப்பூர் (பொது)

Last Updated :
தொகுதி பெயர் : மயிலாப்பூர்

வரிசை எண் : 25

அறிமுகம் :

சென்னையில் மிகவும் பழமையான 4 தொகுதிகளில் மயிலாப்பூர் தொகுதியும் ஒன்று. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் (1952) தேர்தலை சந்தித்த பெருமை இந்த தொகுதிக்கு உண்டு.
2008-ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது இந்த தொகுதி சில மாற்றங்களை கண்டது. அதன்படி இந்த தொகுதியில் இருந்த சென்னை மாநகராட்சி வார்டுகள் 151, 152 ஆகியன புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளச்சேரி தொகுதியுடன் இணைக்கப்பட்டன. ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்த 115, 116 ஆகிய வார்டுகள் மயிலாப்பூர் தொகுதியுடன் இணைந்தன.

இதுவரை நடந்த 13 தேர்தல்களில் 5 முறை தி.மு.க.வும், 4 முறை அ.தி.மு.க.வும், 2 முறை காங்கிரஸýம், ஸ்தாபன காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போது எம்.எல்.ஏ.வாக உள்ள எஸ்.வி. சேகர் அ.தி.மு.க.வில் இருந்து வெற்றி பெற்றார். பின்னர் அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறி எந்த கட்சியையும் சாராத எம்.எல்.ஏ.வாக கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். மத்திய இணையமைச்சரும், நடிகருமான நெப்போலியன் இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.

1952 சி.ஆர். ராமசாமி (காங்கிரஸ்)
1957 சி.ஆர். ராமசாமி (காங்கிரஸ்)
1962 அரங்கண்ணல் (தி.மு.க.)
1967 அரங்கண்ணல் (தி.மு.க.)
1971 டி.என். ஆனந்தநாயகி (ஸ்தாபன காங்கிரஸ்)
1977 டி.கே. கபாலி (தி.மு.க.)
1980 டி.கே. கபாலி (அ.தி.மு.க.)
1984 பா. வளர்மதி (அ.தி.மு.க.)
1989 என். கணபதி (தி.மு.க.)
1991 டி.எம். ரங்கராஜன் (அ.தி.மு.க.)
1996 ந.பூ. ராமஜெயம் (தி.மு.க.)
2001 கே.என். லட்சுமணன் (பா.ஜ.க.)
2006 எஸ்.வி. சேகர் (அ.தி.மு.க.)

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.

வார்டுகள் 94, 96, 115, 116, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150.

வாக்காளர்கள்

ஆண்       பெண்        திருநங்கைகள்     மொத்தம்

1,01,326      1,04,739           13                              2,06,078

வாக்குச்சாவடிகள்

மொத்தம் : 220

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண் :

மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் இன்னசென்ட் திவ்யா - 94451 90402.

No comments:

Post a Comment