Monday, March 14, 2011

தொகுதி அறிமுகம் - 8


திருக்கோவிலூர் (பொது)

Last Updated :
* தொகுதி பெயர் : திருக்கோவிலூர்

* தொகுதி எண் : 76

* அறிமுகம் : விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாக விளங்கிய முகையூர் சட்டப்பேரவைத் தொகுதி நீக்கப்பட்டு தற்போது திருக்கோவிலூர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

* எல்லை :

திருக்கோவிலூர் பேரூராட்சி, அரகண்டநல்லூர் பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி ஆகிய 3 பேரூராட்சிகளும், முகையூர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் இத்தொகுதியில் அடங்கும்.

* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
பேரூராட்சிகள் : அரகண்டநல்லூர்- 12 வார்டுகள்
 திருக்கோவிலூர்- 18 வார்டுகள்
 திருவெண்ணெய்நல்லூர்- 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள் : 94

முகையூர் ஒன்றியம் (57): ஆதிச்சனூர், அடுக்கம், அந்திலி,
அருமலை, அருணாபுரம், தேவனூர், ஏமப்பேர், கல்லந்தல், கீழக்கொண்டூர், கொடுக்கப்பட்டு, சு.கொல்லூர், கோட்டமருதூர், மணம்பூண்டி, மேலக்கொண்டூர், நாயனூர், நெற்குணம், ஒட்டம்பட்டு, பரனூர், வி.புத்தூர், தண்டரை, வடகரைத்தாழனூர்,
வசந்தகிருஷ்ணாபுரம், வெள்ளம்புத்தூர், வீரபாண்டி, டி.அத்திப்பாக்கம், கழுமரம், கொழுந்திராம்பட்டு, குலதீபமங்கலம், நெடுங்கம்பட்டு, சடகட்டி, சொரையப்பட்டு, விளந்தை, ஆலம்பாடி, ஆற்காடு, அருளவாடி, ஆயந்தூர், ஆ.கூடலூர், காடகனூர்,
கண்டாச்சிபுரம், காரணை பெரிச்சானூர், கொடுங்கால், மேல்வாலை, முகையூர், ஒதியத்தூர், சு.பில்ராம்பட்டு, சத்திய கண்டானூர், சென்னகுணம், சித்தாத்தூர், தணிகலாம்பட்டு, வி.சித்தாமூர், வீரங்கிபுரம், வீரசோழபுரம், கொங்கராயனூர், மாரங்கியூர், பையூர், ஆடுர்.கொளப்பாக்கம்.

திருக்கோவிலூர் ஒன்றியம் (12) :
தேவியகரம், ஆவியூர்,  அத்தண்டமருதூர், ஆவி.கொளப்பாக்கம், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர், கொடியூர், முதலூர், வடமலையனூர், வடமருதூர், வடக்குநெமிலி, வில்லிவலம்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் (25) :

அருங்குறுக்கை, டி.எடப்பாளையம், டி.கொணலவாடி, சி.மெய்யூர், பாவந்தூர், பென்ணைவலம், டி.புதுப்பாளையம், சித்தலிங்கமடம்,
அன்ராயநல்லூர், சின்னசெவலை, டி.எடையார், எலந்துரை, ஏமப்பூர், ஏனாதிமங்கலம், எரலூர், மழையம்பட்டு, மணக்குப்பம், டி.மழவராயனூர், மேலமங்கலம், பணப்பாக்கம், செம்மார், சிறுமதுரை,
சிறுவானூர், தடுத்தாக்கொண்டூர், வளையம்பட்டு.

வாக்காளர்கள் :

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
99,594   94,805          15                       1,94,414

வாக்குச்சாவடிகள் :  231

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:

கோட்டாட்சியர் கே.வரலட்சுமி: 9445000422.

Saturday, March 12, 2011

தொகுதி அறிமுகம் - 7


எழும்பூர் (தனி)



Last Updated :

தொகுதி பெயர் : எழும்பூர்

வரிசை எண் : 16

அறிமுகம் :

1957-ம் ஆண்டு எழும்பூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட பூங்காநகர் தொகுதியில் இருந்த 42, 45, 47 வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த 61-வது வார்டும், அண்ணாநகர் தொகுதியில் முன்பு இருந்த 71, 72 - வது வார்டுகளும் இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தொகுதியில் 12 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ.வான பரிதிஇளம்வழுதி 1989-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று வருகிறார்.

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.

1957 - க. அன்பழகன் (சுயேச்சை)
1962 - ஜோதி வெங்கடாசலம் (காங்கிரஸ்)
1967 - ஆசைத்தம்பி (திமுக)
1971 - அரங்கண்ணல் (திமுக)
1977 - எஸ்.மணிமுடி (திமுக)
1980 - எல். இளையபெருமாள் (காங்கிரஸ்)
1984 - எஸ். பாலன் (திமுக)
1989 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1991 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1996 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2001 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2006 - பரிதிஇளம்வழுதி (திமுக)

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.

வார்டு 42, வார்டு 45, வார்டு 46, வார்டு 47,
வார்டு 61, வார்டு 71, வார்டு 72, வார்டு 100,
வார்டு 101, வார்டு 102, வார்டு 103, வார்டு 104,
வார்டு 105, வார்டு 106.

வாக்காளர்கள்

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
79,306   79,631       8 1,                        58,945

வாக்குச்சாவடிகள் மொத்தம் : 178

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

கவிதா ராமு - 93802 41995

தொகுதி அறிமுகம் - 6


எழும்பூர் (தனி)



Last Updated :

தொகுதி பெயர் : எழும்பூர்

வரிசை எண் : 16

அறிமுகம் :

1957-ம் ஆண்டு எழும்பூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட பூங்காநகர் தொகுதியில் இருந்த 42, 45, 47 வார்டுகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த 61-வது வார்டும், அண்ணாநகர் தொகுதியில் முன்பு இருந்த 71, 72 - வது வார்டுகளும் இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தொகுதியில் 12 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏ.வான பரிதிஇளம்வழுதி 1989-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று வருகிறார்.

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.

1957 - க. அன்பழகன் (சுயேச்சை)
1962 - ஜோதி வெங்கடாசலம் (காங்கிரஸ்)
1967 - ஆசைத்தம்பி (திமுக)
1971 - அரங்கண்ணல் (திமுக)
1977 - எஸ்.மணிமுடி (திமுக)
1980 - எல். இளையபெருமாள் (காங்கிரஸ்)
1984 - எஸ். பாலன் (திமுக)
1989 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1991 - பரிதிஇளம்வழுதி (திமுக)
1996 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2001 - பரிதிஇளம்வழுதி (திமுக)
2006 - பரிதிஇளம்வழுதி (திமுக)

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.

வார்டு 42, வார்டு 45, வார்டு 46, வார்டு 47,
வார்டு 61, வார்டு 71, வார்டு 72, வார்டு 100,
வார்டு 101, வார்டு 102, வார்டு 103, வார்டு 104,
வார்டு 105, வார்டு 106.

வாக்காளர்கள்

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
79,306   79,631       8 1,                        58,945

வாக்குச்சாவடிகள் மொத்தம் : 178

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

கவிதா ராமு - 93802 41995

Friday, March 11, 2011

தொகுதி அறிமுகம் - 5


புவனகிரி (பொது)

 
* தொகுதி பெயர் : புவனகிரி

* தொகுதி எண் : 157

* அறிமுகம் :

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக திகழ்கிறது.

* எல்லை :

புவனகிரி தொகுதியில் உள்ள கிராமங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பழைய புவனகிரி தொகுதியில் இடம் பெற்றிருந்த பரங்கிப்பேட்டை ஒன்றியம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

புவனகிரி, சேத்தியாத்தோப்பு. கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சிகள், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கம்மாபுரம் ஒன்றியத்தின் 41 ஊராட்சிகள், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த கீரப்பாளையம் ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள், மேல்புவனகிரி ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புவனகிரி
சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள்: 3
புவனகிரி } 18 வார்டுகள்
சேத்தியாத்தோப்பு } 15 வார்டுகள்
கங்கைகொண்டான் } 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள்: 124

கம்மாபுரம் ஒன்றியம்: (41) பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம் வடக்கு, சேப்ளாநத்தம் தெற்கு, கோட்டகம், உய்யகொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, நெய்வேலி, வடக்குவெள்ளூர், கூனங்குறிச்சி, ஊ.அகரம், இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கல், ஊ.மங்கலம், மும்முடிச்சோழகன், கம்மாபுரம், சு.கீணலூர், ஊ.கொளப்பாக்கம், வி.சாத்தமங்கலம், கோ.மாவிடந்தல், கார்குடல், கோ.ஆதனூர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், கார்மாங்குடி, ஏ.வல்லியம், சி.கீரனூர், மேலபாலையூர், மருங்கூர், கே.தொழூர், கீழப்பாலையூர், தேவங்குடி, சிறுவரப்பூர், வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனூர், தர்மநல்லூர், கோட்டிமுளை, பெருவரப்பூர், பெருந்துறை, டி.பழவக்குடி, காவனூர்.

மேல்புவனகிரி ஒன்றியம்: (40) அழிச்சிக்குடி, அகர ஆலம்பாடி, அம்மன்குப்பம், அம்பாள்புரம், ஆணைவாரி, பூதவராயன்பேட்டை, பு.கொளக்குடி, பு.சித்தேரி, பு.உடையூர், பு.ஆதனூர், சி,ஆலம்பாடி, சின்னநற்குணம், சொக்கன்கொல்லை, எல்லைக்குடி, எறும்பூர், ஜெயங்கொண்டான், வடகிருஷ்ணாபுரம், கத்தாழை, குமுடிமூலை, கிளாவடிநத்தம், மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், மேலமணக்குடி, நெல்லிக்கொல்லை, நத்தமேடு, பெரியநற்குணம், பிரச்சனராமாபுரம், பின்னலூர், சாத்தப்பாடி, தெற்குதிட்டை, துறிஞ்சிக்கொல்லை, உளுத்தூர், வடதலைக்குளம், வடக்குதிட்டை, வத்தராயன்தெத்து, வீரமுடையானநத்தம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரைமேடு.
கீரப்பாளையம் ஒன்றியம்: (43) கே.ஆடூர், ஆயிப்பேட்டை, அ.அக்ராமங்கலம், பூதங்குடி, தேவன்குடி, இடையன்பால்சேரி, எண்ணநகரம், கண்ணங்குடி, கீரப்பாளையம், கீழ்நத்தம், கிளியனூர், கூளாப்பாடி, மதுராந்தகநல்லூர், டி,மணலூர், சி,மேலவண்ணியூர், முகையூர், டி.நெடுஞ்சேரி, ஓடாக்கநல்லூர், ஒரத்தூர், பாளையஞ்சேர்ந்தன்குடி, பண்ணப்பட்டு, பரதூர், பெருங்காலூர், பூந்தோட்டம், சாக்காங்குடி, சி.சாத்தமங்கலம், செங்கல்மேடு, சேதியூர், சிறுகாலூர், தரசூர், தென்ஹரிராஜபுரம், தெற்குவிருதாங்கன், வடக்குவிருதாங்கன், துணிசிரமேடு, வடஹரிராஜபுரம், வடபாக்கம், வாக்கூர், வாழைக்கொல்லை, வயலூர், சி.வீரசோழகன், வெள்ளியங்குடி, வெய்யலூர், விளாகம்.

* வாக்காளர்கள் :
ஆண் பெண் மொத்தம் 1,04,753 1,00,511 2,05,264

* வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 254

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கல்யாணம் : 9445000209

..

தொகுதி அறிமுகம் - 4


துறைமுகம் (பொது)



Last Updated :

தொகுதி பெயர் : துறைமுகம்

வரிசை எண் : 18

அறிமுகம் :

1952 - ம் ஆண்டு துறைமுகம் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பூங்காநகர் தொகுதி நீக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் இருந்த வார்டுகள் 43, 44, 48 மட்டும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பில் சிறிய தொகுதியாக இது உருவாகி இருக்கிறது. முன்பு சேப்பாக்கம் தொகுதியே சிறிய தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் இதுவரை 14 முறை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை சுயேச்சையும் வெற்றிபெற்றுள்ளன. 1977-ல் இருந்து திமுகவின் கோட்டையாக இத்தொகுதி திகழ்ந்து வருகிறது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் தமிழகம் முழுவதும் திமுக தோற்றபோதிலும் இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி வெற்றிபெற்றார். ஆனால், கருணாநிதி தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக நீடிக்காமல் உடனே தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. 1989, 1991 தேர்தல்களில் முதல்வர் கருணாநிதியும், 1996, 2001, 2006 தேர்தல்களில் பேராசிரியர் க.அன்பழகனும் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்கள். கடந்த முறை 2006-ல் நடைபெற்ற தேர்தலில் க.அன்பழகன் 410 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார்

இத்தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்.

1951 கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்)
1957 கிருஷ்ணா ராவ் (காங்கிரஸ்)
1962 ஹாஜா செரீப் (காங்கிரஸ்)
1967 டாக்டர் ஹபிபுல்லா பேக் (சுயேச்சை)
1971 மொய்தீன் (சுயேச்சை)
1977 செல்வராஜன் (திமுக)
1980 செல்வராஜன் (திமுக)
1984 செல்வராஜன் (திமுக)
1989 மு.கருணாநிதி (திமுக)
1991 மு.கருணாநிதி (திமுக)
1991 செல்வராஜ் (திமுக) இடைத் தேர்தல்
1996 க.அன்பழகன் (திமுக)
2001 க.அன்பழகன் (திமுக)
2006 க.அன்பழகன் (திமுக)
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.

வார்டு 23, வார்டு 24, வார்டு 25, வார்டு 26, வார்டு 27, வார்டு 28, வார்டு 29, வார்டு 30, வார்டு 43, வார்டு 44, வார்டு 48, வார்டு 49, வார்டு 80.

வாக்காளர்கள்
ஆண் 75,621
பெண் 69,531
திருநங்கைகள் 31
மொத்தம்   1,45,183

வாக்குச்சாவடிகள்
மொத்தம் : 157

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் எ.சுந்தரவல்லி - 94431 58866

Thursday, March 10, 2011


தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் விவசாயிகள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு அதன் உச்சக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த கூட்டல், கழித்தல் கணக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தேர்தல் திருவிழாவில் உதிரிக்கட்சிகள் கூட உற்சாகத்துடன் வலம் வருகின்றன. சக்திக்குத் தகுந்த ‘சீட்டு’கள். இல்லாவிட்டால் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற  அறிவிப்புடன், அகப்பட்டதை சுருட்டி அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்த்துவிடுவது என்பதே அவர்களது அதிகபட்ச வேலைத்திட்டம். இப்படி, ஜாதி, வட்டாரம், தொழில் என ஏதோ ஓர் அடிப்படையில்  உதிரி இயக்கங்களாக ஒண்றிணைந்து, தேர்தல் காற்று வீசும்போதே தூற்றிக் கொள்ளத் தயாராகி விட்டன பல அமைப்புகள்.

ஆனால், கிராமப்புற வாக்குவங்கியின் பெரும்பான்மை எண்ணிக்கையாக இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இந்த தேர்தல் கால செப்படி வித்தை எப்போதுமே சாத்தியமாவதில்லை.

அறுபது ஆண்டுகால ஜனநாயகத்தில் எந்த நிறைவையும் எட்ட முடியாமல் தவிக்கும் சில சபிக்கப்பட்ட மக்கள் பிரிவில் விவசாயிகள் முக்கியமானவர்கள். ஆனால், தேர்தல் காலத்தில் வெறும் வாக்களிக்கும் மனிதக் கருவிகளாக மட்டுமே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். 

சங்கங்கள் என்ற பெயரில் விவசாயிகளை  ஒருங்கிணைக்கும் சில இயக்கங்களும், முறையான அரசியல் பயிற்சி எதையும் அவர்களுக்கு அளிப்பதில்லை. கையாகவும், தாமரையாகவும், உதய சூரியனாகவும், இரட்டை இலையாகவும், பம்பரமாகவும் இன்னபிற ஓட்டுக் கட்சிகளின் சின்னங்களாகவும் கூழாங்கற்களைப் போல, விவசாயிகளின் அரசியல் பேராற்றல் சிதறுண்டு கிடக்கிறது.

கடன் தள்ளுபடி பெறுதல், மானிய விலையில் உரங்கள், விதைகள் பெறுதல் என்ற அளவில் விவசாயிகளின் அரசியல் தேவைகள் இங்கே குறுக்கப்படுகின்றன.
அனைத்து அரசியல், சமூக செயற்பாடுகளும் விவசாயிகளை நோக்கியே செல்லுவது போல நமக்குத் தோன்றுவது உண்டு. ஆனாலும் அவை  வெறும் தோற்றப்பிழைகள் என்பதே உண்மை.

அது உண்மையாக இருந்திருந்தால், தகவல் தொழில் நுட்பம் மட்டுமே  முதற்பெருந் தொழிலாக இன்று அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.

உற்பத்தித் தொழிலான விவசாயத்தை முற்றிலும் ஓரங்கட்டி விட்டு, ‘தரகு’வேலையான தகவல் தொழில் நுட்பத்தை மட்டுமே,  நாட்டின் வளர்ச்சிக்கான வழியாகச் சித்தரிக்கும் கோட்பாட்டு மோசடியும் அரங்கேறி இருக்காது.

அத்தகைய கோட்பாட்டு மோசடி என்ற பெருவிருட்ச நிழலில் பெருகித்தழைத்த விழுதுகள்தான், ஸ்பெட்க்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போன்ற மிகப்பெரிய பொருளாதார மோசடிகள்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக ஒரு காலக்கட்டத்தில் இருந்த விவசாய சங்கங்கள் இன்று ஏன் இப்படி முகவரி இழந்து நிற்கின்றன?
தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத எம்.ஜி.ஆர், 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு, நாராயணசாமி நாயுடு தலைமையில் இயங்கிய விவசாய சங்கத்தின் எதிர்ப்பும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதே நாராயணசாமி நாயுடுவின் வீட்டிற்கே சென்று சந்தித்து, அவரது ஆதரவைக் கோரிப்பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர்.
சரியாகவோ, தவறாகவோ, விவசாயிகளின் பேராற்றலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தையும் நாராயணசாமி நாயுடு ஏற்படுத்தி உள்ளார்.
ஏன் இப்போது அது சாத்தியப் படவில்லை?

விவசாய சங்கங்கள் அந்த ஆளுமையை இழந்து நிற்க காரணம் என்ன?
விவசாயிகளின் தற்சார்பு என்ற அந்தரங்க பலம் நசுக்கப்பட்டதே (demoralise) அதற்குக் காரணம்.
இலவசங்களுக்கும், மானியத்திற்கும் கையேந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு அவர்களை அரசியல் கட்சிகள் தள்ளி விட்டன.

மனித இனத்தின் அனைத்து ஆற்றலையும் அர்த்தமற்றதாக்கிவிடும் வறுமை, பசி, நோய் இவை மூன்றும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்களாகின.
இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை அடைவதற்காகவே, இந்திய விவசாயி தன் ஆயுள்காலம் முழுவதும் போராடுகிறான். அவனது குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு, நல்ல கல்வி என்பது பலிக்காத நெடுங்கனவாகவே நீடித்து வருகிறது.

தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியைப்  பொறுத்தவரை தேர்தல் என்பது என்ன?
ஓட்டுக்குப் பணம் கிடைக்கும். வாக்குப் பதிவன்று பிரியாணிப் பொட்டலங்கள் கூட கிடைக்க வாய்ப்புண்டு. மோதிரங்கள், குடங்கள் என இன்னும் சில பொருட்களும் கிடைக்கலாம். உள்ளூர்த்தலைவர் சார்ந்துள்ள கட்சிகளின் வசதியையும், செல்வாக்கையும் பொறுத்தது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய அற்ப சந்தோஷங்களுடன் வந்து போகும் ஒரு ஜனநாயகத் திருவிழா என்பதைத் தவிர, தேர்தல் குறித்து அவர்களுக்கு எந்த மதிப்பீடும் இல்லை.

பசுமைப் புரட்சி என்ற பெயரால் தங்களது மண்ணும், வாழ்வும் மழுங்கடிக்கப்பட்ட சோகத்தை அவர்கள் இதுவரை உணரவில்லை.

இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பயன்படுத்தி வரும் வேதி உரங்களால் வளமானது பெருமுதலாளிகள் சிலரே தவிர தங்களது மண்ணோ, வாழ்வோ இல்லை என்ற உண்மையும் அவர்களுக்கு புரிவதில்லை.

39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீராதாரங்கள் இருந்த இடம் தெரியாமல் போன மாயம் குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.

இவற்றின் விளைவே விவசாயம் என்ற தொழில் இன்று அழிவை நோக்கிச் சரியத் தொடங்கி இருப்பது என்ற யதார்த்தமும் அவர்களுக்கு புரியவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற பசுமைப் புரட்சியால், உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மண்ணின் மீது, இன்னுமொரு பசுமைப் புரட்சி எனும் ருத்திர தாண்டவத்தை ஆடி முடிக்க நமது அரசுகள் தயாராகி விட்ட விபரீதத்தையும் அவர்களால்  உணர முடியவில்லை.

தங்களிடமிருந்து மிக குறைந்த விலைக்கு வாங்கப்படும் கத்திரிக்காய், கடைகளில் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படும் மாயம் என்ன என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இப்படித் தன்னுணர்வு எதுவும் அற்ற விட்டில் பூச்சிகளைப் போல விவசாயிகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கான அரசியலும், தேவையும் என்ன என்பதை அடையாளம் காண முடியாத விசாயிகள், வாக்குவங்கி அரசியல் வர்த்தகத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகளைப் போலச் சீரழிகிறார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், உற்பத்திக்கு உரிய விலை… என விவசாய சங்கங்கள் வழக்கமாக முன்வைக்கும் மிகச்சில முழக்கங்களும் கூட, அரசியல் உள்ளீடற்ற வெற்றுப் புலம்பலாய் மெல்ல மெல்லத் தேய்ந்து வருகின்றன.

வாக்காளர்களில் 50 விழுக்காடாகவும், மக்கள் தொகையில் 70 விழுக்கடாகவும் இருக்கும் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் தங்கள் தேவைகள் குறித்து குரல் எழுப்பவும், நிபந்தனைகளை முன்வைக்கவும் திராணியற்றவர்களாக மௌனித்திருப்பது, அவர்களுக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கும்  நல்லதல்ல.

இந்த லட்சணத்தில், அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களை விவசாயிகள் என்று சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஆனால், சாதாரண  குடிமகன் ஒருவன் தன்னை விவசாயி என்று பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறான் என்பதே உண்மை.

கட்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, அடிப்படைப் பிரச்சனைகளை முன்னிறுத்தும் அணுகுமுறையை விவசாய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கிளைகளாகச் செயல்படும் விவசாய அமைப்புகளால், அது சாத்தியமில்லை.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களாக விவசாய அமைப்புகள் இயங்கத் தொடங்கும் போதுதான், அவற்றின் பலம் அரசியல் வாதிகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதுதான் உண்மையான அரசியலும் கூட!
மேனா. உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்.

தொகுதி அறிமுகம் - 3

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (பொது)





தொகுதி பெயர் : சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

வரிசை எண் : 19

அறிமுகம் : தமிழக சட்டப்பேரவை தொகுதிகளிலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளையும் இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி புதிதாக 2011-ல்தான் உருவாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்வர் கருணாநிதி இருந்து வருகிறார். திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதர் சயீத் (அ.தி.மு.க) உள்ளார். இதுவரை சேப்பாக்கம் தொகுதியில் 8 முறை தேர்தல் நடைபெற்று உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் 7 முறை திமுகவும், காங்கிரஸ் ஒரு முறையும் தேசிய லீக் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1989- நடைபெற்ற தேர்தலில் தேசிய லீக் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றது. முதல்வர் கருணாநிதி கடந்த மூன்று தேர்தல்களில் (1996, 2001, 2006) சேப்பாக்கம் தொகுதியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
சென்னை மாநகராட்சி வார்டு 79, வார்டு 81, வார்டு 82, வார்டு 83, வார்டு 84, வார்டு 85, வார்டு 86, வார்டு 87, வார்டு 88, வார்டு 89, வார்டு 90, வார்டு 91, வார்டு 92, வார்டு 93, வார்டு 95, வார்டு 111.

வாக்காளர்கள்:

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
89,688 89,815 7 1,79,510

வாக்குச்சாவடிகள்:

மொத்தம் : 184

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

சென்னை குடிநீர் வாரிய பொது மேலாளர் ப. பாஸ்கரன் - 78450 20000